இந்திய பத்திரிக்கை அறக்கட்டளை - புதிய தலைவராக விவேக் கோயங்கா
September 8 , 2017 2740 days 1008 0
எக்ஸ்பிரஸ் குழுவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான விவேக் கோயங்கா இந்திய பத்திரிக்கை அறக்கட்டளை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்து பத்திரிக்கையின் முன்னாள் தலைமை ஆசிரியர் ரவி இதன் துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய பத்திரிக்கை அறக்கட்டளை என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி நிறுவனம் ஆகும். இது ஒரு லாபநோக்கற்ற கூட்டுறவு நிறுவனமாகும். இதன் தலைமையகம் புதுதில்லியில் உள்ளது.
இது இந்தியாவில் உள்ள மாநிலங்களில் நிகழும் நிகழ்வுகளையும் தகவல்களையும் திரட்டி தருகின்றது.
இன்சாட் என்ற தகவல்தொடர்பு செயற்கைக் கோளைக் கொண்டு தனக்கென்று ஒரு தகவல்தொடர்பு செயற்கைக்கோளுடன் தகவல்களையும் செய்திகளையும் ஒளிபரப்பும் ஒரு நிறுவனம் தெற்காசியாவிலேயே இந்திய பத்திரிக்கை அறக்கட்டளை மட்டுமே.