மத்திய அரசு, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி K.பிரசாத் அவர்களை இந்திய பத்திரிக்கை கழகத்தின் (Press Council of India - PCI) தலைவராக நியமித்துள்ளது. இது அவருடைய இரண்டாவது பணிக்காலமாகும்.
இவருடைய நியமனத்திற்கு, துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவை தலைவராகக் கொண்ட மூன்று நபர் குழுவினால் அனுமதியளிக்கப்பட்டது.
இவர், இதற்கு முன்னர் தலைவராக இருந்த நீதிபதி மார்கண்டேய கட்ஜீ பதவி விலவிய பிறகு நவம்பர் 2014ல் தலைவராக நியமிக்கப்பட்டார்.
சட்டப்பூர்வ அங்கமான PCI, அச்சு ஊடகங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் ஒரு கண்காணிப்பு அமைப்பாக செயல்படுவதற்கான கடமையைக் கொண்டுள்ளது. PCI யின் கடமைகள் பத்திரிக்கை கழகச் சட்டம் 1978ல் கொடுக்கப்பட்டுள்ளன.
சட்டப்பூர்வமான, நீதித் துறையைப் போன்ற அதிகாரமுடைய (Quasi-Judicial) அங்கமான PCI, அச்சு ஊடகங்களுக்கான கண்காணிப்பு அமைப்பாக செயல்படுகிறது.
இவ்வமைப்பு (PCI), ஒரு தலைவர் மற்றும் 28 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இதன் தலைவர் வழக்கமாக உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியாவார்.
28 உறுப்பினர்களில் 20 உறுப்பினர்கள் ஊடகங்களின் பிரதிநிதிகள் ஆவார். ஐந்து உறுப்பினர்கள் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலிருந்தும் நியமிக்கப்படுகின்றனர். மற்ற மூன்று உறுப்பினர்கள் கலாச்சாரம், இலக்கியம் மற்றும் சட்டத் துறைகளைச் சேர்ந்தவர்களாவர்.