TNPSC Thervupettagam

இந்திய பாரம்பரிய புராதன இடங்கள் மீதான காணொலிகள்

December 23 , 2017 2576 days 1026 0
  • இந்திய பாரம்பரிய புராதன இடங்களின் 360O கோணத்தையும், மெய்நிகர் உண்மை உள்ளடக்கத்தையும் (Virtual reality Content) வெளிக்காட்டுவதற்காக யுனெஸ்கோவின் அமைதி மற்றும் நீடித்த வளர்ச்சிக்காக மகாத்மா காந்தி கல்வி நிறுவனம் மற்றும் சேம்சங் இந்தியா (Samsung India) நிறுவனத்திற்கிடையே ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
  • ஒடிஸாவிலுள்ள கோனார்க்கின் சூரிய கோவிலினதும், உத்திரப்பிரதேசத்திலுள்ள ஆக்ராவின் தாஜ்மகாலினதும் 360O கோண காணொலிகளையும், மெய்நிகர் உண்மை உள்ளடக்கத்தையும் காட்டிட இவ்விரு நிறுவனங்களுக்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • சேம்சங் இந்தியா நிறுவனத்தினால் இந்தியாவின் பிற புராதன பாரம்பரிய நினைவிடங்களிலும் 360O கோண காணொலி காட்சிப் பதிவுகளும், மெய்நிகர் உண்மை உள்ளடக்கமும் மேற்கொள்ளப்படும்.
  • இது நாடு முழுவதுமுள்ள மாணவர்களுக்கு அனுபவ கற்றல் உள்ளடக்கத்தை (experiential educational content) வழங்கும்.
  • இத்திட்டம் மூலம் பெறப்படும் மெய்நிகர் உண்மை உள்ளடக்கங்களானது இந்தியாவின் சுற்றுலாத் துறையின் மேம்பாட்டினுடைய பயன்பாட்டிற்காக மத்திய சுற்றுலா அமைச்சகம் மற்றும் மாநில சுற்றுலா வாரியத்திற்கும் வழங்கப்பெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்