TNPSC Thervupettagam

இந்திய மருத்துவத் தொழில்நுட்பத் தொழில் துறை 2024

December 23 , 2024 3 days 67 0
  • இந்தியத் தொழில் துறைக் கூட்டமைப்பின் (CII) 21வது சுகாதார உச்சி மாநாடு ஆனது, “2047 ஆம் ஆண்டில் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான – அதாவது விக்சித் பாரத் 2047 - சுகாதாரப் பாதுகாப்பை மாற்றியமைத்தல்” என்ற கருத்துருவின் கீழ் நடைபெற்றது.
  • இந்திய மருத்துவச் சாதனங்கள் துறையின் மதிப்பானது சுமார் 14 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதோடு 2030 ஆம் ஆண்டிற்குள் அது 30 பில்லியன் டாலர்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஜப்பான், சீனா மற்றும் தென் கொரியாவுக்கு அடுத்தபடியாக ஆசியாவில் நான்காவது பெரிய மருத்துவச் சாதன உற்பத்தி சந்தையாக இந்தியா உள்ளது.
  • மேலும், உலகின் முன்னணி 20 உலகளாவிய மருத்துவச் சாதனச் சந்தைகளில் இந்திய நாடும் ஒன்றாக உள்ளது.
  • உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு தலா 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் மருத்துவச் சாதனப் பூங்காக்களை உருவாக்குவதற்கான ஒரு திட்டம் ஆனது 400 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்