TNPSC Thervupettagam

இந்திய மருந்து & இந்திய மருத்துவச் சாதனம் மாநாடு 2020

April 10 , 2020 1564 days 599 0
  • மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மருந்துப் பொருட்கள் துறையானது இந்திய  வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்புடன் இணைந்து இந்திய மருந்து 2020 & இந்திய மருத்துவச் சாதனம் 2020 குறித்த ஒரு மாநாடு மற்றும் கண்காட்சியைக் குஜராத்தில் உள்ள காந்தி நகரில் நடத்தியது.
  • இந்த நிகழ்வின் கருப்பொருள், “இந்திய மருந்துத் துறை : விலை குறைந்த மற்றும் தரமான சுகாதார நலத்தின் மீதான சவால்களை எதிர் கொள்ளுதல் மற்றும் இந்திய மருத்துவ உபகரணம்: நாடு தழுவிய அனைவருக்குமான சுகாதார நலத்திற்கான விலை குறைந்த பொறுப்பு மிக்க மற்றும் தரமான மருத்துவச் சாதனங்களை ஊக்குவித்தல்” என்பதாகும்.
  • இந்த ஆண்டில் (2020) நடைபெற்ற மாநாடு அதன் 5வது பதிப்பாகும். இந்த நிகழ்வானது முதன்முறையாக குஜராத் மாநிலத்தில் நடத்தப்படுகின்றது.
  • இந்திய மருந்துப் பொருட்கள் சந்தையானது கொள்ளளவின் அடிப்படையில் மூன்றாவது மிகப்பெரிய சந்தையாகவும் தரத்தின் அடிப்படையில் 13 மிகப்பெரிய சந்தையாகவும் விளங்குகின்றது.
  • உலக அளவில் மரபு சார்ந்த மருந்துகளின் மிகப்பெரிய விநியோகஸ்தராக இந்தியா விளங்குகின்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்