TNPSC Thervupettagam

இந்திய மாநிலங்களின் சார்புநிலை பொருளாதாரச் செயல்திறன்

September 23 , 2024 6 days 57 0
  • பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை வழங்கீட்டுக் குழுவின் (EAC-PM) உறுப்பினரான சஞ்சீவ் சன்யால் 'இந்திய மாநிலங்களின் சார்புநிலை பொருளாதாரச் செயல்திறன்: 1960-61 முதல் 2023-24 வரை’ என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையினை உருவாக்கியுள்ளார்.
  • இந்த அறிக்கையில் பயன்படுத்தப்பட்ட அனைத்துத் தரவுகளும் நடப்பு நிர்ணய விலை மதிப்பில் உள்ளன மற்றும் இந்த பகுப்பாய்விற்கான கால கட்டம் 1960-61 முதல் 2023-24 வரையாகும்.
  • 1960-61 ஆம் ஆணடில் 10.5% என்ற அளவில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றாவது பெரிய பங்கைக் கொண்டிருந்த மேற்கு வங்காளம் ஆனது தற்போது 2023-24 ஆம் ஆண்டில் 5.6% பங்கினை மட்டுமே கொண்டுள்ளது.
  • மேற்கு வங்காளத்தின் தனிநபர் வருமானம் ஆனது 1960-61 ஆம் ஆண்டில் தேசிய சராசரியை விட 127.5% அதிகமாக இருந்தது, ஆனால் அதன் வளர்ச்சியானது தேசியப் போக்குகளுக்கு ஏற்ற வேகத்துடன் ஒருங்கி அமைய தவறிவிட்டது.
  • இதன் விளைவாக, 2023-24 ஆம் ஆண்டில் அதன் தனிநபர் வருமானம் ஆனது 83.7% ஆகக் குறைந்துள்ளது.
  • 1991 ஆம் ஆண்டில் பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பிறகு தென் மாநிலங்கள் கணிசமாக மற்ற மாநிலங்களை முந்தியுள்ளன.
  • கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களின் பங்கானது, 2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக 30% ஆகும்.
  • அனைத்து தென் மாநிலங்களின் தனிநபர் வருமானம் ஆனது 1991 ஆம் ஆண்டிற்குப் பிறகு தேசிய சராசரியை விட அதிகமாகியுள்ளது.
  • மதிப்பீட்டுக் காலம் முழுவதும் தனிநபர் வருமானம் அதிகம் கொண்ட நகரங்களில் டெல்லியும் ஒன்றாகும்.
  • மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு ஆகியவை 1960 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் 3 பெரிய தொழில்துறைக் குழுக்களின் ஒரு தாயகமாக இருந்தன.
  • மகாராஷ்டிரா மாநிலத்தில் பரந்த அளவில் நிலையான செயல்திறன் பதிவாகி உள்ள நிலையில் மேற்கு வங்காளத்தின் பங்கு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.
  • ஒரு சிறிய சரிவுக்குப் பிறகு, 1991 ஆம் ஆண்டிற்குப் பிந்தைய காலத்தில் தமிழ்நாடு இந்த நிலையில் முன்னேறியுள்ளது.
  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஹரியானாவின் பங்கு தற்போது பஞ்சாபை விட அதிகமாக உள்ளது.
  • 2023-24 ஆம் ஆண்டில் பஞ்சாபின் 106.7 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், ஹரியானாவின் தனிநபர் வருமானம் ஆனது 176.8 சதவீதத்தை எட்டியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்