இந்திய மாநிலங்களின் சார்புநிலை பொருளாதாரச் செயல்திறன்
September 23 , 2024 61 days 110 0
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை வழங்கீட்டுக் குழுவின் (EAC-PM) உறுப்பினரான சஞ்சீவ் சன்யால் 'இந்திய மாநிலங்களின் சார்புநிலை பொருளாதாரச் செயல்திறன்: 1960-61 முதல் 2023-24 வரை’ என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையினை உருவாக்கியுள்ளார்.
இந்த அறிக்கையில் பயன்படுத்தப்பட்ட அனைத்துத் தரவுகளும் நடப்பு நிர்ணய விலை மதிப்பில் உள்ளன மற்றும் இந்த பகுப்பாய்விற்கான கால கட்டம் 1960-61 முதல் 2023-24 வரையாகும்.
1960-61 ஆம் ஆணடில் 10.5% என்ற அளவில் தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றாவது பெரிய பங்கைக் கொண்டிருந்த மேற்கு வங்காளம் ஆனது தற்போது 2023-24 ஆம் ஆண்டில் 5.6% பங்கினை மட்டுமே கொண்டுள்ளது.
மேற்கு வங்காளத்தின் தனிநபர் வருமானம் ஆனது 1960-61 ஆம் ஆண்டில் தேசிய சராசரியை விட 127.5% அதிகமாக இருந்தது, ஆனால் அதன் வளர்ச்சியானது தேசியப் போக்குகளுக்கு ஏற்ற வேகத்துடன் ஒருங்கி அமைய தவறிவிட்டது.
இதன் விளைவாக, 2023-24 ஆம் ஆண்டில் அதன் தனிநபர் வருமானம் ஆனது 83.7% ஆகக் குறைந்துள்ளது.
1991 ஆம் ஆண்டில் பொருளாதார தாராளமயமாக்கலுக்குப் பிறகு தென் மாநிலங்கள் கணிசமாக மற்ற மாநிலங்களை முந்தியுள்ளன.
கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய ஐந்து மாநிலங்களின் பங்கானது, 2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தோராயமாக 30% ஆகும்.
அனைத்து தென் மாநிலங்களின் தனிநபர் வருமானம் ஆனது 1991 ஆம் ஆண்டிற்குப் பிறகு தேசிய சராசரியை விட அதிகமாகியுள்ளது.
மதிப்பீட்டுக் காலம் முழுவதும் தனிநபர் வருமானம் அதிகம் கொண்ட நகரங்களில் டெல்லியும் ஒன்றாகும்.
மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு ஆகியவை 1960 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் 3 பெரிய தொழில்துறைக் குழுக்களின் ஒரு தாயகமாக இருந்தன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பரந்த அளவில் நிலையான செயல்திறன் பதிவாகி உள்ள நிலையில் மேற்கு வங்காளத்தின் பங்கு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.
ஒரு சிறிய சரிவுக்குப் பிறகு, 1991 ஆம் ஆண்டிற்குப் பிந்தைய காலத்தில் தமிழ்நாடு இந்த நிலையில் முன்னேறியுள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஹரியானாவின் பங்கு தற்போது பஞ்சாபை விட அதிகமாக உள்ளது.
2023-24 ஆம் ஆண்டில் பஞ்சாபின் 106.7 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், ஹரியானாவின் தனிநபர் வருமானம் ஆனது 176.8 சதவீதத்தை எட்டியுள்ளது.