25 மாநிலங்களில் உள்ள 230 மாவட்டங்களின் நிலத்தடி நீரில் ஆர்சனிக் மாசுபாடும் மற்றும் 27 மாநிலங்களில் உள்ள 469 மாவட்டங்களின் நிலத்தடி நீரில் புளோரைடு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளம் மற்றும் பீகார் ஆகிய இரு மாநிலங்களும் நிலத்தடி நீரில் ஏற்படும் ஆர்சனிக் மாசுபாட்டினால் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
ஆர்சனிக் என்பது காற்று, நீர் மற்றும் மண்ணில் காணப்படும் இயற்கையான ஒரு வேதி மூலக்கூறாகும்.
இது பூமியின் கண்ட மேலோட்டில் பரவலாகக் காணப்படும் மணமற்ற மற்றும் சுவை அற்ற ஒரு உலோகமாகும்.
உலக சுகாதார அமைப்பானது குடிநீரில் இருக்க வேண்டிய ஆர்சனிக் வரம்பினை 10 μg/L என்ற அளவாக தற்போது பரிந்துரைத்துள்ளது.