மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய வன ஆய்வு நிறுவனம் (Forest Survey of India) இந்திய மாநில வன அறிக்கையை (India State of Forest Report) வெளியிட்டுள்ளது.
இது இரு ஆண்டிற்கு ஒரு முறை (Biennial) வெளியிடப்படும் அறிக்கையாகும்.
இந்த அறிக்கையின் படி, 2015 முதல் 2017க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் வனங்களுக்கு கீழான பரப்பு சற்றே21% என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது.
மேலும் இந்த அறிக்கைப்படி, இந்தியாவின் மொத்த புவியியற் நிலப்பரப்பில் (Geographic area) 21.53 சதவீதப் பரப்பு வனமாகும். அதாவது 7,08,273 சதுர கி.மீ வனப்பரப்பை இந்தியா கொண்டுள்ளது.
இந்தியாவின் மொத்த புவியியற் நிலப்பரப்பு 32, 87, 569 சதுர கி.மீ. ஆகும்.
ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, ஓடிஸா மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் அதிகபட்ச அளவில் வனபரப்பு (Forest Cover) அதிகரித்துள்ளது.
வடகிழக்கு இந்தியாவில் வனப்பரப்பு குறைந்துள்ளது. அதாவது மிசோரம், நாகாலாந்து, அருணாச்சலப்பிரதேசம், திரிபுரா, மேகாலயா ஆகிய ஐந்து மாநிலங்களில் வனப்பரப்பு குறைந்துள்ளது.
வனப்பரப்பின் (Forest Cover) அடிப்படையில் மத்தியப் பிரதேசமானது அதிக வனப்பரப்பு உடைய மாநிலமாக விளங்குகின்றது.
மொத்த புவியியற் பரப்போடு (Total Geographical Area) ஒப்பிடுகையில் அதிக வன பரப்பு சதவீதத்தை (Percentage of Forest Cover) கொண்ட இந்திய பகுதிகளுக்கான பிரிவில், அதிக வனபரப்பு உடையதாக லட்சத்தீவு உள்ளது. அதனைத் தொடர்ந்து மிசோரம், அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள் உள்ளன.
இடமாற்றுச் சாகுபடி (shifting cultivation), பிற உயிரியற் அழுத்தங்கள் (biotic pressures), சுழற்சி முறையிலான மரம் வெட்டல்கள், வளர்ச்சிப் பணிகளுக்காக வனப் பகுதிகளை திருத்துதல், வனப்பரப்பு நீரில் மூழ்குதல், இயற்கை பேரிடர் மற்றும் வேளாண் விரிவாக்கம் ஆகியவை வனப்பரப்பின் குறைவிற்கு முக்கிய காரணங்களாக கூறப்பட்டுள்ளன.
உலகளவில் அதிகளவு வனப்பரப்பு உடைய நாடுகளில் இந்தியா பத்தாவது இடத்தில் உள்ளது. உலகளவில் ஒப்பிடுகையில் இந்தியாவின்4 சதவீத நிலப்பரப்பானது வனப்பகுதியாகும்.
இந்த வனக் கணக்காய்வானது செயற்கைகோள் வரைபடமிடல் (Satellite Mapping) மூலம் இந்தியாவின் 633 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.