TNPSC Thervupettagam

இந்திய முதியோர் அறிக்கை 2023

October 3 , 2023 293 days 306 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் ஆனது, 2023 ஆம் ஆண்டிற்கான இந்திய முதியோர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • 10.5% அல்லது 14.9 கோடி (2022 ஆம் ஆண்டு ஜூலை 01 அன்று) ஆக இருந்த 60 வயதிற்கு மேற்பட்ட நபர்களின் மக்கள் தொகையானது 2050 ஆம் ஆண்டிற்குள் 20.8% அல்லது 34.7 கோடியாக இரட்டிப்பாகும்.
  • 2050 ஆம் ஆண்டிற்குள், இந்த மக்கள் தொகையானது 20.8% ஆக இரட்டிப்படைந்து 347 மில்லியனாக இருக்கும்.
  • இந்த நூற்றாண்டின் இறுதியில், முதியோர்கள் எண்ணிக்கையானது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 36% ஆக இருக்கும்.
  • 2050 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பர்.
  • உதாரணமாக கேரளா மற்றும் மேற்கு வங்காளத்தில் குழந்தைகள் மற்றும் இளைஞர் மக்கள் சிறந்த வாய்ப்புகளுக்காக வேண்டி புலம் பெயர்வதால் அங்கு தனியாக வாழும் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
  • தற்போது, 35 வயதிற்குட்பட்ட 65% இந்தியர்களுடன், உலகிலேயே அதிக வளர் இளம் பருவத்தினர் மற்றும் இளையோர்கள் வசிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று ஆகும்.
  • 18.7% முதியவர்களுக்கு வருமானம் இல்லை.
  • இந்த விகிதம் ஆனது 17 மாநிலங்களில் தேசிய விகிதத்தினை விட அதிகமாக உள்ள நிலையில் இது உத்தரகாண்ட் மாநிலத்தில் 19.3% விகிதமும், லட்சத்தீவில் 42.4% விகிதமும் உள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் முதியோர்களின் பங்கு தேசியச் சராசரியை விட அதிகமாகப் பதிவாகியுள்ளன.
  • இந்த இடைவெளியானது, 2036 ஆம் ஆண்டளவில் மிகவும் அதிகரிக்கும் என எதிர் பார்க்கப் படுகிறது.
  • பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், 2021 மற்றும் 2036 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர் பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்