தேசிய மன நலம் மற்றும் நரம்பு அறிவியல் மையத்தை (NIMHANS - National Institute of Mental Health and Neuro Sciences) சேர்ந்த நரம்பியல் வல்லுநர்களைக் கொண்ட ஆராய்ச்சிக் குழுவானது இந்திய மூளை வார்ப்புருக்கள் (IBT - Indian Brain Templates) மற்றும் மூளை வரைபடத்தை மேம்படுத்தியுள்ளது.
இது நோய்வாய்ப்பட்ட நிலையில் மூளையின் செயல்பாடுகளைப் புரிந்து கொள்வதற்காக பல்வேறு மூளைப் படங்களிலிருந்துப் பெறப்படும் ஒரு ஒட்டு மொத்தப் பிரதிநிதித்துவமாகும்.
இந்தப் புதிய மக்கள் தொகை மற்றும் வயது தொடர்பான IBT ஆனது மூளை வளர்ச்சி மற்றும் வயது ஆகியவற்றை மிகத் துல்லியமான வகையில் கண்டறிய அனுமதிக்கும்.
இந்த வார்ப்புருக்கள் மற்றும் வரைபடமானது பக்கவாதம், மூளைக்கட்டி மற்றும் மனச்சோர்வினால் ஏற்படும் நோய் (டிமென்டியா) போன்ற நரம்பு மண்டலப் பிரச்சினைகளுடன் இருக்கும் தனிப்பட்ட நோயாளிகளின் விருப்பப் பகுதிகளுக்கான எளிதான குறிப்பு வரைபடங்களை அளிக்கவுள்ளது.