பெங்களூரூவின், எலஹங்காவில் உள்ள இந்திய விமானப் படைத்தளத்தில் நடைபெற்ற சாகச நிகழ்ச்சியில் இந்திய இராணுவ சேவைப் படைப்பிரிவை (ASC – Army Service Corps) சேர்ந்த ” டோர்னாடோஸ் “ (Tornadoes) என்ற மோட்டார் சைக்கிள் சாகச அணியினர் புதிய உலகச் சாதனையைப் படைத்துள்ளனர்.
500 CC திறன் கொண்ட ராயல்டு என்பீல்டு மோட்டார் சைக்கிளில் 58 பேர் கொண்ட இக்குழுவினர் 1200 மீட்டர் பயணித்து சாதனைப் புரிந்துள்ளனர்.
இந்த டோர்னாடோஸ் படையினர் இதற்குமுன் இந்திய இராணுவத்தின் டேர்டெவில்ஸ் எனும் இந்திய சமிக்ஞை படையினரால் ஒரே மோட்டார் சைக்கிளில் 56 பேர் பயணித்து நிகழ்த்திய சாதனையை முறியடித்துள்ளனர்.
இந்த டோர்னாடோஸ் அணி 1982-ல் கர்னல். N. ராவ் மற்றும் கேப்டன் J.P. வர்மா தலைமையில் உருவாக்கப்பட்டது.
இதுவரை இந்த அணி மொத்தம் 19 உலக மற்றும் தேசிய சாதனைகளைப் படைத்துள்ளது.