இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) எண்ணிம நாணயத்தின் சில்லறை விற்பனை சோதனையானது 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்தது.
இது இணையவழி ரூபாய் அல்லது எண்ணிம ரூபாய் என விளம்பரப் படுத்தப் படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய வங்கி எண்ணிம நாணயம் (CBDC) என்பது இறையாண்மை மிக்க நாணயத்தின் ஒரு மின்னணு வடிவமாகும்.
சில்லறை எண்ணிம ரூபாயானது, மத்திய வங்கியின் நேரடிப் பொறுப்பின் கீழ் இருப்பதால், பணம் செலுத்துவதற்கும் கடன் ஈடு செய்வதற்கும் பாதுகாப்பான முறையில் பணத்திற்கான அணுகலை வழங்குகிறது.
நாடு முழுவதும் உள்ள நான்கு நகரங்களில் எண்ணிம ரூபாயின் சில்லறை விற்பனையில் பங்கேற்பதற்காக கட்டம் வாரியாக எட்டு வங்கிகள் இதில் அடையாளம் காணப் பட்டுள்ளன.
முதற்கட்டமாக, பாரத் ஸ்டேட் வங்கி, ICICI வங்கி, YES வங்கி, IDFC First வங்கி உள்ளிட்ட நான்கு வங்கிகள் இந்தச் சோதனைக் கட்டத்தில் பங்கேற்கின்றன.
இந்தச் சோதனையானது, முதலில் மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் புவனேஸ்வர் ஆகிய நான்கு நகரங்களில் மேற்கொள்ளப் படுகிறது.