TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய ரெப்போ விகிதங்கள்

April 10 , 2022 833 days 417 0
  • இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு, தொடர்ச்சியாக 11வது முறையாக ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதங்களை மாற்றாமல் வைத்திருப்பதற்கு ஆதரவாக வாக்களித்தது.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறுகையில், 4 சதவீத ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றாமலிருக்க  இந்தக் குழு ஒருமனதாக வாக்களித்துள்ளது.
  • மேலும் விளிம்பு நிலை வசதி என்ற நிதிமுறை (MSF - Marginal Standing Facility) விகிதம் மற்றும் வங்கி விகிதம் ஆகியனவும் 4.25 சதவீதமாக மாறாமல் உள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 16.2%, இரண்டாம் காலாண்டில் 6.2%, மூன்றாம் காலாண்டில் 4.1%, மற்றும் நான்காம் காலாண்டில் 4.0% என தற்போதைய உண்மையான GDP வளர்ச்சி ஆனது  7.2% என்று கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்