TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதியியல் கொள்கை 2023

February 11 , 2023 524 days 283 0
  • இந்திய ரிசர்வ் வங்கியின் நிதியியல் கொள்கைக் குழுவானது (MPC), முக்கியக் கொள்கை விகிதமான ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
  • இது வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி கடன் வழங்குவதற்கான ஒரு வட்டி விகிதம் ஆகும்.
  • அதன் சில்லறைப் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இது 25 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தப்பட்டு 6.50 சதவீதமாக உள்ளது.
  • ஒரு அடிப்படைப் புள்ளி என்பது ஒரு சதவீதப் புள்ளியில் நூறில் ஒரு பங்கு ஆகும்.
  • அடுத்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது, 6.4 சதவீதமாக இருக்கும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
  • 2024 ஆம் நிதியாண்டில் சில்லறைப் பணவீக்கம் 5.3 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • இதன் காரணமாக வாகனங்கள், வீடு மற்றும் தனிநபர் கடன்களுக்கான சம மாதத் தவணை உயரும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்