TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கியின் நிறுவன தினம் - ஏப்ரல் 01

April 5 , 2023 604 days 276 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது 1935 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதியன்று நிறுவப் பட்டது.
  • இந்திய மத்திய வங்கியானது 1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் படி நிறுவப் பட்டது.
  • இது நாட்டின் பணவியல் கொள்கையை ஒழுங்குபடுத்துவதற்கும், நாட்டின் நாணயம் மற்றும் கடன்முறையை வெகுவாக நிர்வகிப்பதற்குமான பொறுப்பினைக் கொண்ட ஒரு நிறுவனம் ஆகும்.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது அரசாங்கத்தின் வங்கியாளராகச் செயல்படுவதோடு, அது பணத் தாள்களை வெளியிடுதல், அந்நியச் செலாவணி இருப்புக்களை மேலாண்மை செய்தல் மற்றும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை மேற்பார்வை செய்தல் போன்றப் பல்வேறு பணிகளையும் செய்கிறது.
  • ஒரு நிதியமைப்பின் உறுதித் தன்மையைப் பராமரிக்கச் செய்வதிலும் பொருளாதார மேம்பாட்டினை ஊக்குவிப்பதிலும் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்