TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கியின் பொருளாதார நிலை அறிக்கை

January 24 , 2024 176 days 292 0
  • இந்தியப் பொருளாதாரம் ஆனது 2024 ஆம் ஆண்டில் அதன் வளர்ச்சி வேகத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • 2024-25 ஆம் ஆண்டில் நிலையான 7%+ என்ற மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி இலக்கினைப் பூர்த்தி செய்ய, பணவீக்க நிலையானது 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 4% இலக்குடன் ஒருங்கியிருக்க வேண்டும்.
  • 2024 ஆம் ஆண்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் ஆசியா முன்னணியில் உள்ளதுடன் இந்தியா போன்ற வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் உலக நாடுகளை விட சிறப்பாக செயல்படும் என்று இந்த அறிக்கை கணித்துள்ளது.
  • அத்தியாவசியம் சாரா செலவினங்களில் வலுவான முறையில் வளர்ச்சி நிலவுவதால் நகர்ப்புற நுகர்வு மீட்சிப் பெற்றுள்ளது, ஆனால் கிராமப்புறச் செலவின வளர்ச்சி முடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்