இந்திய ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கை – 2021
June 1 , 2021 1275 days 719 0
இந்திய ரிசர்வ் வங்கியானது (Reserver Bank of India – RBI) தனது வருடாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் வங்கிகளின் சொத்துத் தரத்தினையும் வரவிருக்கும் காலாண்டிற்கான அதிகபட்ச நிதி வழங்குவதற்குத் தேவையான அவற்றின் தயார் நிலையையும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளது.
முக்கிய தகவல்கள்
2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வாராக் கடன்களின் வகைப்பாடு மீது விதிக்கப் பட்ட இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் நீக்கியதையடுத்து வாராக் கடன்கள் பற்றிய உண்மையான தகவல்களை வங்கிகள் வழங்க வேண்டும் என RBI எச்சரித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு மார்ச் முதல் ஆகஸ்டு வரையிலான தற்காலிக கடன் தவணை சலுகையைத் தேர்ந்தெடுத்த அனைத்து கடன் கணக்குகளின் மீதான கூட்டு வட்டியை தள்ளுபடி செய்வது வங்கிகளின் நிதிநிலையின் மீது நெருக்கடியை திணிக்கும் என இந்த அறிக்கை கூறுகிறது.
வங்கிகளின் மொத்த வாராக்கடன் விகிதமானது 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்த 8.2 சதவீதத்திலிருந்து 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 6.8% ஆக குறைந்து உள்ளது.
2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 66.6% ஆக இருந்த வங்கிகளின் நிதிப்பரவல் விகிதமானது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 75.5% ஆக குறைந்துள்ளது.
2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 14.8% ஆக இருந்த வங்கிகளின் இடர் உண்டாக்கும் சொத்துக்களின் விகிதமானது டிசம்பர் மாதத்தில் 15.9% ஆக உயர்ந்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் 6.8% ஆக இருந்த வங்கிசாரா நிதி நிறுவனங்களின் மொத்த வாராக் கடன் விகிதமானது டிசம்பர் மாதத்தில் 5.7% ஆக உயர்ந்துள்ளது.
2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 23.7% ஆக இருந்த வங்கிசாரா நிதி நிறுவனங்களின் நிதி நிலைப்பாடு விகிதமானது (CAR) டிசம்பர் மாதத்தில் 24.8% ஆக உயர்ந்துள்ளது.