இந்திய ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கை 2023-24
June 4 , 2024 172 days 237 0
ஏப்ரல் மாதத்தில் தொடங்கிய நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7% வளர்ச்சி அடையும்.
முந்தைய ஆண்டில் 7.0% ஆக இருந்த உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது 7.6% ஆக அதிகரித்துள்ளதுடன் இந்தியப் பொருளாதாரமானது நன்கு மேம்பட்டுள்ளது என்பதோடு இது 7% அல்லது அதற்கு மேற்பட்ட வளர்ச்சி பதிவான மூன்றாவது தொடர்ச்சியான பதிவாகும்.
2024-25 ஆம் ஆண்டிற்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி என்பது நிதி அபாயங்கள் சமமாக பேணப்பட்டதுடன் 7.0% என்று கணிக்கப் பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் நிகர வருமானம் 2024 ஆம் நிதியாண்டில் 2.11 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என்ற நிலையில் இது முந்தைய நிதியாண்டில் சுமார் 87,420 கோடி ரூபாயாக இருந்தது.
இந்த நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கியின் இருப்புநிலை மதிப்பு ஆனது 11.08% அதிகரித்து 70.48 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.