TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கியின் 29வது நிதி நிலைத்தன்மை அறிக்கை

July 8 , 2024 138 days 226 0
  • 2024 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில், பட்டியலியப்பட்ட  வணிக வங்கிகளின் (SCBs) இடர் உண்டாக்கும் சொத்துக்கள் மீதான மூலதன விகிதம் (CRAR) மற்றும் பொதுப் பங்கு அடுக்கு 1 (CET1) விகிதம் ஆகியவை முறையே 16.8% மற்றும் 13.9% ஆக இருந்தது.
  • பட்டியலியப்பட்ட  வணிக வங்கிகளின் மொத்த வாராக் கடன்கள் (GNPA) விகிதம் ஆனது பல ஆண்டுகளில் இல்லாத வகையில் 2.8 சதவீதமாக குறைந்துள்ளது.
  • அவற்றின் நிகர வாராக் கடன்கள் (NNPA) விகிதம் ஆனது 2024 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 0.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.
  • வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) சரியான நிலையில் உள்ள நிலையில் CRAR 26.6 சதவீதமாகவும், GNPA விகிதம் 4.0% ஆகவும், சொத்துகள் மீதான வருமானம் - நிகர வருமானம் மற்றும் மொத்தச் சொத்துக்களுக்கு இடையிலான விகிதம் - (RoA) முறையே 3.3% ஆகவும் உள்ளது.
  • CRAR என்பது வங்கியின் நிதி வலிமையின் அளவீடு ஆகும்.
  • 16.8% CRAR என்பது ஒவ்வொரு 100 அலகு இடர் உண்டாக்கும் சொத்துக்களால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்டுவதற்கும் 16.8 அலகு மூலதனத்தை வங்கி கொண்டுள்ளது.
  • GNPA விகிதம் ஆனது, திருப்பிச் செலுத்தப்படாத வங்கியின் கடன்களின் சதவீதத்தை மதிப்பிடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்