TNPSC Thervupettagam

இந்திய ரிசர்வ் வங்கி குறை தீர்ப்பாளர் முன்பு வழக்குப் பிரதிநிதித்துவம்

July 15 , 2024 3 days 58 0
  • இந்திய ரிசர்வ் வங்கியின் 2021 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த குறை தீர்ப்புத் திட்டத்தின் அரசியலமைப்புச் செல்லுபடித் தன்மையினை மதராஸ் உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
  • இது புகார்தாரர்கள் தங்கள் வழக்குகளைக் குறை தீர்ப்பாளர் முன் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கு வழக்கறிஞர்களை ஈடுபடுத்துவதைத் தடுக்கிறது.
  • RBI-IOS 2021 திட்டத்தின் 3(1)(c) மற்றும் 10(2(f) விதிகள் அரசியலமைப்பிற்கு முரணானது என அறிவிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது.
  • வழக்கறிஞர்கள் சட்ட ரீதியான உரிமையை மட்டுமே கொண்டுள்ளதாகவும், நீதித் துறை மற்றும் பகுதியளவு நீதித்துறை நடவடிக்கை சார்ந்த மன்றங்களில் அவை ஆஜர் ஆவதற்கான அடிப்படை உரிமையினைக் கொண்டிருக்கவில்லை என்றும் நீதி மன்றம் கூறியுள்ளது.
  • இத்திட்டம் புகார்தாரர்கள் நேரடியாகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்டப் பிரதிநிதிகள் மூலமாகவோ குறை தீர்ப்பாளரை அணுக அனுமதிக்கிறது.
  • ஆனால் அந்தப் பிரதிநிதிகள் ஒரு வழக்கறிஞராக இருக்கக் கூடாது என்பதையும் நீதி மன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்