TNPSC Thervupettagam

இந்திய ரூபாய் மதிப்பில் வர்த்தகம்

July 16 , 2023 497 days 365 0
  • வங்காளதேசம் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளானது, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரூபாய் மதிப்பிலான வர்த்தகப் பரிவர்த்தனையினைத் தொடங்கியது.
  • இந்த நடவடிக்கையானது அமெரிக்க நாட்டின் டாலரை சார்ந்திருப்பதைக் குறைத்துப் பிராந்திய பண மதிப்பு மற்றும் வர்த்தகத்தினை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
  • வங்காளதேசமானது அமெரிக்க நாட்டின் டாலரோடுச் சேர்த்து, மற்றொரு வெளிநாட்டு நாணயத்துடன் இருதரப்பு வர்த்தகம் செய்வது இதுவே முதல் முறையாகும்.
  • வங்காளதேசத்தின் டாக்காவிலிருந்து இந்தியாவிற்கு மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி மதிப்பானது 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
  • இந்தியாவில் இருந்து வங்காளதேசத்திற்கு மேற்கொள்ளப்படும் இறக்குமதியின் மதிப்பு 13.69 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
  • முன்னதாக இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இந்திய ரூபாய் மதிப்பில் வர்த்தகம் செய்ய ஒப்புக் கொண்டன.
  • 2021-22 ஆம் ஆண்டில் இந்தியா-மலேசியா நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தக மதிப்பானது 19.4 பில்லியன் டாலர்களைத் தொட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்