இந்திய-வங்கதேச எல்லையில் யானைகள் செல்வதற்கு 13 வழித்தடங்கள்
July 28 , 2017 2705 days 1080 0
யானைகள் இடம்பெயர்வதற்கு வசதியாக இந்திய-வங்கதேச எல்லையில் அமைக்கப்பட்டுள்ள வேலிகளை நீக்கி 13 வழிகளை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
யானைகள் இடம் பெறுவது இயற்கையான ஒன்று. அவை இடம்பெயர்வதற்கு வசதியாக அடையாளம் காணப்பட்டுள்ள 13 வழிகள் உள்ள இடத்தில் வேலிகள் நீக்கிவிட்டு சிறப்புக் கதவுகள் அமைக்கப்படும். வங்கதேச எல்லையை ஒட்டி உள்ள மேகாலயாவில் 12 வழிகளும், அசாம் எல்லையில் 1 வழியும் உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.