TNPSC Thervupettagam

இந்திய வங்கிக் கூட்டமைப்பு - 2018

August 24 , 2018 2286 days 714 0
  • இந்திய வங்கிக் கூட்டமைப்பு (India Banking Conclave) – 2018 ஆனது புதுடெல்லியில் 2018ம் ஆண்டு  ஆகஸ்ட் 23-24ல் நடைபெற்றது.
  • இது தனது அறிவுப் பங்காளர் மற்றும் அரசு சிந்தனைச்சாவடியான நிதி ஆயோக்குடன் இணைந்து பொருளாதாரக் கொள்கை ஆராய்ச்சி மையத்தால் (Center for Economic and Policy Research - CEPR) ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
  • இந்திய வங்கித் துறையை எதிர்காலங்களில் வரக்கூடிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மாற்றியமைப்பதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும்.
  • CEPR ஆனது 1983ல் ஐக்கிய ராஜ்யத்தின் லண்டனில் நிறுவப்பட்டது. இது 1983-ல் ரிச்சர்ட் போர்டேஸ் ஆல் நிறுவப்பட்டு பதிவு செய்யப்பட்ட ஐரோப்பிய தொண்டு நிறுவனத்தால் நிதியளிக்கப்படுகிறது.
  • ஐரோப்பா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பொருளாதாரக் கொள்கைகளின் தரத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்