2023 ஆம் ஆண்டில் வெளியிடப்பட வேண்டிய இந்திய வனங்களின் நிலை குறித்த அறிக்கை (ISFR), ஒரு வருடத்திற்கும் மேலாக தாமதமாகியும் இன்னும் வெளியிடப் பட வில்லை
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படும் இந்த அறிக்கையானது இந்திய வனக் கணக்கெடுப்பு (FSI) அமைப்பினால் தயாரிக்கப்படுகிறது.
1991 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகின்ற இந்த அறிக்கையானது இந்திய வனங்களின் நிலை பற்றிய விரிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது.
தாமதமாகியுள்ள இந்த அறிக்கையானது, அரசாங்கம் அறிக்கை வெளியிடும் காலக் கெடுவைத் தவற விட்ட இரண்டாவது சூழலைக் குறிக்கிறது என்பதோடு, கடைசியாக இதே போன்று 2007 ஆம் ஆண்டில் காலக்கெடு தவறியது.
2021 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இதற்கு முந்தைய அறிக்கையில், நாட்டின் மொத்த வனங்களின் பரப்பளவு 713,789 சதுர கிலோமீட்டர் அல்லது 21.71 சதவீதமாக உள்ளது.
2019 ஆம் ஆண்டு ISFR அறிக்கையில் குறிப்பிடப்பட்டத் தரவினை ஒப்பிடும்போது இது 1,540 சதுர கிலோமீட்டர்கள் அதிகமாகும்.
2013 முதல் 2023 ஆம் ஆண்டு வரையில், 95 சதவீதக் காடழிப்பு ஆனது இயற்கையான காடுகளில் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகத்தின் (MoEFCC) படி, மேம்பாட்டுப் பணிகளுக்காக இந்தியா 173,396 ஹெக்டேர் (1,733 சதுர கிலோமீட்டர்) காடுகளை அழித்துள்ளது.
2013 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 21,761 சதுர கிலோமீட்டர் பரப்பிலான காடு இழப்பினை ஈடு செய்யும் வகையிலான காடு வளர்ப்பு முறையினை மீட்டெடுத்துள்ளதாகவும் அறிக்கை கூறியுள்ளது.
ஒடிசாவில், 1999 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் வகைப்படுத்தப்படாத காடுகள் 17 சதுர கிலோமீட்டரிலிருந்து 16,282 சதுர கிலோமீட்டராக அதிகரித்தன.
ஆனால் 2017 ஆம் ஆண்டு அறிக்கையில் இது 22 சதுர கிலோமீட்டராகக் குறைந்தது.