TNPSC Thervupettagam

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்கத் துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக நியமனம்

August 18 , 2020 1469 days 632 0
  • அமெரிக்கத் தேர்தலானது 2020 ஆம் ஆண்டில் நடைபெற உள்ளது.
  • குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க அதிபரான டொனால்டு டிரம்ப் அமெரிக்கத் தேர்தலில் போட்டியிடுவதற்கான மற்றொரு வாய்ப்பினையும் கொண்டுள்ளார். இவர் எதிர் அணியைச் சேர்ந்தவரான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடன் என்பவரை எதிர்த்துப் போட்டியிடவுள்ளார்.
  • ஜோ பிடன் என்பவர் ஒபாமா அதிபராக இருந்த போது அமெரிக்காவின் துணை அதிபராகப் பணியாற்றினார்.
  • அதிபர் வேட்பாளரான ஜோ பிடன் ஜனநாயகக் கட்சியின் சார்பாக கமலா ஹாரிஸ் என்பவரை துணை அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளார்.
  • தேசிய அலுவலகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதலாவது பெண் மற்றும் முதலாவது கறுப்பினப் பெண்மணி இவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்