TNPSC Thervupettagam

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் வெப்பக் குறியீடு

July 24 , 2023 365 days 222 0
  • இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) ஆனது சோதனை அடிப்படையிலான வெப்பக் குறியீட்டினை வெளியிட்டுள்ளது.
  • மனிதர்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைப்பதற்காக மக்கள் எடுக்க வேண்டிய கூடுதல் நடவடிக்கைகள் தொடர்பான ஒரு வழிகாட்டுதலை இந்த வெப்பக் குறியீடு வழங்குகிறது.
  • ஒரு சோதனை அடிப்படையிலான இந்த வெப்பக் குறியீட்டிற்குப் பின்வரும் வண்ணக் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.
    • பச்சை: 35 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான சோதனை அடிப்படையிலான வெப்பக் குறியீடு
    • மஞ்சள்: 36-45 டிகிரி செல்சியஸ் வரம்பிற்குட்பட்ட சோதனை அடிப்படையிலான வெப்பக் குறியீடு
    • ஆரஞ்சு: 46-55 டிகிரி செல்சியஸ் வரம்பிற்குட்பட்ட சோதனை அடிப்படையிலான வெப்பக் குறியீடு
    • சிவப்பு: 55 டிகிரி செல்சியஸுக்கு மேலான சோதனை அடிப்படையிலான வெப்பக் குறியீடு.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்