TNPSC Thervupettagam

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் 150வது ஆண்டு நிறைவு

January 5 , 2025 17 days 156 0
  • 1875 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதியன்று நிறுவப்பட்ட இந்திய வானிலை ஆய்வுத் துறையானது தனது 150 ஆண்டு காலத்திய சேவை நிறைவு விழாவினைக் கொண்டாட உள்ளது.
  • இந்தியத் துணைக்கண்டத்தில் வானிலை பற்றிய ஒரு முறையான கண்காணிப்பு, மிகவும் வழக்கமான அறிக்கையிடல் மற்றும் அறிவியல்துறை சார் முன்னறிவிப்பு ஆகியவற்றிற்காக வேண்டி உருவாக்கப்பட்ட ஆரம்ப கால அரசு துறைகளில் இதுவும் ஒன்றாகும்.
  • 1793 ஆம் ஆண்டில் (அப்போதைய) மதராசில் முதலாவது வானிலை மற்றும் வானியல் ஆய்வகம் நிறுவப்பட்டது.
  • பின்னர் 1875 ஆம் ஆண்டில் H.F.பிளான்ஃபோர்ட் அவர்களை வானிலை அறிக்கையாளர் எனக் கொண்டு இந்திய வானிலை ஆய்வுத் துறையானது நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்