TNPSC Thervupettagam

இந்திய விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புறக்கோள்

November 22 , 2021 1008 days 481 0
  • அபிஜித் சக்ரவர்த்தி என்பவர் தலைமையிலான இந்திய விஞ்ஞானிகள்  வியாழனை விட 1.4 மடங்கு பெரிய கிரகம் ஒன்றைக்  கண்டுபிடித்துள்ளனர்.
  • இந்த புதிய புறக் கோளானது சூரியனை விட 1.5 மடங்கு அதிக நிறையினைக் கொண்டு இருப்பதோடு, வியாழனை விட 1.4 மடங்கு பெரியதாகவும் உள்ளது.
  • இந்த புறக்கோள் ஆனது TESS அட்டவணையின்படி TOI 1789 என்றும் ஹென்றி டிராப்பர் அட்டவணையின்படி HD 82139 என்றும் அழைக்கப்படுகிறது.
  • அகமதாபாத்தைச் சேர்ந்த இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம் இதனைக் கண்டுபிடித்து உள்ளது.
  • அதன் ஆராய்ச்சியாளர்கள் மவுண்ட் அபு ஆய்வகத்தில் உள்ள  PRL (Physical Research Laboratory) அமைப்பின் 1.2 மீட்டர் அளவிலான தொலைநோக்கியில் PRL மேம்பட்ட சுற்று வட்ட-திசைவேக அபு-வான் ஆராய்ச்சி (PARAS - PRL Advanced Radial-velocity Abu-sky Search) ஒளியிழை மூலமான நிறமாலை அமைப்பினைப் பயன்படுத்தினர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்