TNPSC Thervupettagam

இந்திய விமானப்படைத் தினம் - அக்டோபர் 08

October 13 , 2022 682 days 247 0
  • இந்திய விமானப்படை 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி தொடங்கப்பட்டு 90 ஆண்டுகள் நிறைவடைகிறது.
  • இந்திய குடியரசுத் தலைவர் இந்திய விமானப்படையின் தலைமை தளபதி ஆவார்.
  • இந்த முறை சண்டிகரில் உள்ள சுக்னா ஏரியின் மீது விமானப்படைத் தின சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
  • முதன்முதலாக வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த விமானப்படை தினத்தின் அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சி இந்திய விமானப்படையால் தேசிய தலைநகரப் பகுதிக்கு வெளியே நடத்தப்பட்டது.
  • இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக 8 அக்டோபர் 1932 அன்று இங்கிலாந்துப் பேரரசால் ராயல் இந்திய விமானப் படையாக நிறுவப்பட்டது.
  • 1950 ஆம் ஆண்டில் இந்திய விமானப்படை எனப் பெயர் மாற்றப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்