85வது இந்திய விமானப்படை தினத்தன்று, இந்திய விமானப்படை “மெட் வாட்ச்” எனும் உடல்நலத்திற்கான முதல் கைபேசி செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது.
மெட் வாட்ச் – மூன்று ஆயுதப் படைப்பிரிவினருக்குமான உடல்நலத்திற்கான முதல் கைபேசி செயலி ஆகும்.
இந்திய விமானப்படை ஊழியர்களுக்கு நம்பத்தகுந்த சுகாதாரத் தகவல்களை வழங்கும் பல அம்சங்களை இந்த செயலி கொண்டுள்ளது.
இந்த செயலியானது, விமானப்படை வீரர்கள் சரியான நேரத்தில் தங்கள் குழந்தைகளுக்கு நோய் தடுப்புத் திறனூட்டலை மேற்கொள்ள ஓர் நினைவூட்டியாகவும், “இந்திர தனுஷ் திட்டத்தை” செயல்படுத்தவும் உதவும்.