2019 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதியன்று உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப் படை தளத்தில் 87வது இந்திய விமானப் படை தின அணிவகுப்பு நடத்தப்பட்டது.
பாலகோட் வான்வழித் தாக்குதலில் பங்கேற்ற IAF அதிகாரிகள் “அவென்ஜர் அமைப்பை உருவாக்கும் விதமாக” மூன்று மிராஜ் - 2000 ரக விமானங்களிலும் இரண்டு சு-30 எம்.கே.ஐ ரகப் போர் விமானங்களிலும் பறந்தனர்.
இந்தத் தினக் கொண்டாட்டமானது தேசப் பாதுகாப்பின் ஒரு முக்கியப் பகுதியாக விளங்கும் IAFன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க முயல்கின்றது.