TNPSC Thervupettagam

இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனம் - அறிக்கை

November 28 , 2018 2249 days 1236 0
  • இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனமானது (ZSI - Zoological Survey of India) சமீபத்தில் “உயிரின வாழ்வியல் மண்டலங்களில் விலங்குகளின் பன்முகத்தன்மை : இந்திய தீவுகள்” என்ற அறிக்கையை வெளியிட்டது.
  • இது முதன்முறையாக அந்தமான் நிகோபார் தீவுகளில் காணப்படும் அனைத்து விலங்கின வகை உயிரினங்களையும் உள்ளடக்கிய தரவு தளத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்திய புவியியல் பகுதிகளில் 0.25 சதவிகிதத்தை மட்டுமே கொண்ட தீவுகள், நாட்டின் ஒட்டுமொத்த விலங்கின உயிர் வகைகளில் 10 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட உயிரினங்களைக் கொண்டுள்ளது என இவ்வறிக்கை நிரூபித்துள்ளது
  • ஒட்டுமொத்தமாக தீவுகளில் காணப்படும் 10 கடல் விலங்கினங்களில் கீழ்க்காணும் 2 உயிரினங்கள் IUCN-வின் (International Union for Conservation of Nature) அச்சுறு நிலையில் உள்ள உயிரிகளுக்கான சிவப்பு அட்டவணையில் மறையத்தகு (Vulnerable) நிலையில் உள்ள உயிரினமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவையாவன
    • அவில்லியா/கடல்பசு மற்றும்
    • இந்தோ-பசிபிக் ஹம்பேக் டால்பின்
  • ஒட்டுமொத்தமாக 46 நிலவாழ் பாலூட்டிகள் அங்கு கண்டறியப்பட்டுள்ளன. அவை IUCN-இன் பட்டியலின்படி கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • கீழ்க்காணும் 3 இனங்கள் உயர் அச்சுறு நிலையில் உள்ளனவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவையாவன
  1. அந்தமான் மூஞ்சூறு (குரோசிடூரா அந்தமானென்சிஸ்)
  2. ஜென்கின்னின் மூஞ்சூறு (குரோசிடூரா ஜென்சின்ஸி
  3. நிக்கோபார் மூஞ்சூறு (குரோசிடூரா நிகோபாரிகா)
    • 5 உயிரினங்கள் அழிவு நிலையில் (Endangered) உள்ளனவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
    • 9 உயிரினங்கள் மறையத்தகு நிலையில் (Vulnerable) உள்ளனவாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
    • 1 உயிரினம் அண்மை அச்சுறு நிலையில் (Near Threatened) உள்ளனவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • தீவுகளின் சுற்றுச்சூழலியலின் மற்றொரு தனித்துவமான அம்சம் 555 கற்கோரை பவளப்பாறைகள் (scleractinian corals) அங்கு காணப்படுவதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்