TNPSC Thervupettagam
April 18 , 2018 2414 days 746 0
  • உத்திரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியக் கண்காட்சி மையம் மற்றும் சந்தையில் (India Expo Centre and Mart) 2018 ஆம் ஆண்டிற்கான இந்திய வீட்டுக் கண்காட்சியின் (Home Expo India 2018) 7- வது பதிப்பை மத்திய ஜவுளித் துறை மற்றும் தகவல் & ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி தொடங்கி வைத்துள்ளார்.
  • 3 நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியை கைவினைப் பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (Export Promotion Council for Handicrafts -EPCH) ஒருங்கிணைத்துள்ளது.
  • வீட்டு உபயோகப் பொருட்கள் (House wares), ஜவுளிகள் (Textiles) மற்றும் மரச்சாமான்கள் (Furnitures) எனும் மூன்று வகைப்பாட்டுப் பிரிவுகளில்  இந்தக் கண்காட்சி நடத்தப்படுகின்றது.
  • இந்தியாவில் கைவினைப் பொருட்களுக்கான முதன்மை ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பே கைவினைப் பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம்  (EPCH)    ஆகும்.
  • அரசு, வாடிக்கையாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோருக்கு இடையே வினையூக்கியாக (catalyst) செயல்படும் முக்கிய செயல்பாத்திரத்தினை இது வகிக்கிறது.
  • கைவினைப் பொருட்களில் வர்த்தகத்தை மேம்படுத்துவதே கைவினைப் பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் முக்கிய நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்