உத்திரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியக் கண்காட்சி மையம் மற்றும் சந்தையில் (India Expo Centre and Mart) 2018 ஆம் ஆண்டிற்கான இந்திய வீட்டுக் கண்காட்சியின் (Home Expo India 2018) 7- வது பதிப்பை மத்திய ஜவுளித் துறை மற்றும் தகவல் & ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி தொடங்கி வைத்துள்ளார்.
3 நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியை கைவினைப் பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (Export Promotion Council for Handicrafts -EPCH) ஒருங்கிணைத்துள்ளது.
வீட்டு உபயோகப் பொருட்கள் (House wares), ஜவுளிகள் (Textiles) மற்றும் மரச்சாமான்கள் (Furnitures) எனும் மூன்று வகைப்பாட்டுப் பிரிவுகளில் இந்தக் கண்காட்சி நடத்தப்படுகின்றது.
இந்தியாவில் கைவினைப் பொருட்களுக்கான முதன்மை ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பே கைவினைப் பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (EPCH) ஆகும்.
அரசு, வாடிக்கையாளர்கள், ஏற்றுமதியாளர்கள் ஆகியோருக்கு இடையே வினையூக்கியாக (catalyst) செயல்படும் முக்கிய செயல்பாத்திரத்தினை இது வகிக்கிறது.
கைவினைப் பொருட்களில் வர்த்தகத்தை மேம்படுத்துவதே கைவினைப் பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் முக்கிய நோக்கமாகும்.