சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் (International Union for the Conservation of Nature - IUCN) வெட்டுக்கிளி நிபுணர் குழுவானது முதன்முறையாக இந்தியாவில் வெட்டுக்கிளிகளின் மீதான ஒரு சிவப்புப் பட்டியல் ஆய்வைத் தொடங்கியுள்ளது.
இதுவரை, எந்தவொரு இந்திய வெட்டுக்கிளி இனமும் சிவப்புத் தரவுப் பட்டியலில் இடம் பெறவில்லை.
இந்த ஆய்வானது தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகியவற்றின் எல்லையில் அமைந்த நீலகிரி பல்லுயிர்ப் பெருக்கக் காப்பகத்தில் (Nilgiris Biosphere Reserve - NBR) தொடங்கப்பட உள்ளது.
இந்த ஆய்வானது டெட்டிலோபஸ் திரிஷூலா அல்லது சிலாவின் பிக்மி திரிஷூலா எனப்படும் புதிய வெட்டுக்கிளி இனத்துடன் சேர்த்து NBR பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட 30 இனங்களையும் உள்ளடக்கியுள்ளது.
சிலாவின் பிக்மி திரிஷூலா 2018 ஆம் ஆண்டில் கேரளாவில் உள்ள இரவிகுளம் தேசியப் பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.
1964 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தல் நிலையில் உள்ள இனங்களின் மீதான சிவப்புப் பட்டியலானது உலகில் உயிரியல் இனங்களின் உலகப் பாதுகாப்பு நிலைக்கான மிகவும் விரிவான ஒரு பட்டியலாகும்.