கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் வினோத் குமார் செல்வராஜ் என்பவருக்கு பயிர்ப் பாதுகாப்பு வகையின் கீழ் ICAR (Indian Council of Agricultural Research) ஜவஹர்லால் நேரு விருது வழங்கி கௌரவிக்கப் பட்டது.
இந்த விருதானது “பருத்தியைப் பாதிக்கும் புகையிலைக் கீற்று வைரஸின் தோற்றம் : அறிகுறி வெளிப்படுதல், பரவல் மற்றும் மேலாண்மை குறித்த ஆய்வுகள்” என்ற அவருடைய ஆராய்ச்சிப் பணிக்காக வழங்கப் பட்டுள்ளது.