இந்திய அரசானது, ஹைத்தி நாட்டில் உள்ள இந்தியர்களை வெளியேற்றுவதற்காக 'இந்திராவதி நடடிக்கையினை' தொடங்கியுள்ளது.
2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அதிபர் ஜோவெனல் மோய்ஸ் படுகொலை செய்யப் பட்டதிலிருந்து கரீபியன் நாடான ஹைத்தியில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பெருமளவிலான கும்பல் வன்முறையினை எதிர்கொண்டு வருகிறது.
அவரின் படுகொலைக்குப் பிறகு, நாட்டின் அதிகாரப்பூர்வ தலைவர், பிரதமர் ஏரியல் ஹென்றி, பல நாடுகளின் ஆதரவுடன், ஆட்சியைக் கைப்பற்றினார்.
பிரதமரை இராஜினாமா செய்ய வற்புறுத்தும் முயற்சியில் பல்வேறு ஆயுதமேந்திய குழுக்கள் ஹைத்தியில் உள்ள முக்கிய இடங்கள் மீது ஒருங்கிணைந்த தாக்குதல்களை மேற்கொண்டன.
ஹைத்தியில் 2019 ஆம் ஆண்டு முதல் தேர்தல்கள் நடத்தப்படவில்லை.