கர்நாடக இசைப்பாடகரான டி.எம்.கிருஷ்ணா 2015-16ஆம் ஆண்டிற்கான இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், பாதுகாக்கும் வகையிலும் செயல்பட்டமைக்காக 2015-16ஆம் ஆண்டிற்கான 30வது இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருதுக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவ்விருது இந்திரா காந்தியின் மறைவு தினமான அக்டோபர் 31ஆம் தேதி அன்று வழங்கப்படும்.
கலாச்சார விஷயங்களில் சமூக உள்ளடக்கத்தை கொணர்ந்ததன் காரணமாக (Bringing Social inclusiveness in Culture) 2016 ஆம் ஆண்டு இவருக்கு இராமன் மகசேசே விருது வழங்கப்பட்டது.
இந்திராகாந்திதேசியஒருமைப்பாட்டுவிருது
காங்கிரஸ் கட்சியின் நூற்றாண்டு நிறுவன வருடமான 1985ஆம் ஆண்டு இந்த விருது நிறுவப்பட்டது.
இந்தியாவிலுள்ள பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் சமூகங்கள் இடையே தோழமையையும், புரிந்துணர்வையும், தேசிய ஒருமைப்பாட்டையும் ஊக்குவித்தவர்களுக்கு அக்டோபர் 31ஆம் தேதி ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது.