சாகித்திய அகாடமி தனது உயரிய கௌரவ தோழமைத் திட்டத்திற்கு வேண்டி 25 வருட இடைவெளிக்குப் பிறகு இந்திரா பார்த்தசாரதி என்ற ஒரு தமிழ் எழுத்தாளரைத் தேர்வு செய்துள்ளது.
இவர் பொதுவாக இ.பா. என்று அழைக்கப்படுகிறார்.
ஜெயகாந்தன் (62 வயது) 1996 ஆம் ஆண்டில் அகாடமியின் இந்த தோழமைத் திட்டத்தில் இணைந்த இளம் வயது நபர் ஆவார்.
இவருக்கு முன்பாக தமிழ் எழுத்துத் துறையிலிருந்து இருவர் மட்டுமே தேர்வாகினர்.
அவர்கள் ராஜாஜி (அ) இராஜகோபாலாச்சாரி (1969) மற்றும் T.P. மீனாட்சிசுந்தரம் (1975) ஆகியோர் ஆவர்.
V. ராகவன் (1979) மற்றும் K.R. ஸ்ரீனிவாச ஐயங்கார் (1985) ஆகிய இரு தமிழர்களும் தோழமைத்திட்டத்தில் சேர்க்கப்பட்டாலும் சமஸ்கிருதம் மற்றும் இந்திய ஆங்கில மொழிப் படைப்புகளுக்கு வேண்டி அவர்கள் ஆற்றியப் பங்களிப்பிற்காகவே அது வழங்கப் பட்டது.
இந்திரா பார்த்தசாரதி 16 நாவல்கள், 10 நாடகங்கள் மற்றும் 6 சிறுகதைத் தொகுப்புகள் உட்பட 40க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
இவரது அரசியல் கருப்பொருள் குறித்தப் படைப்புகளுக்காக வேண்டி இவர் பெரிதும் குறிப்பிடப் படுகிறார்.
அவர்ராமானுஜர் நாடகத்தை தனது மகத்தான படைப்பாகக் கருதுகிறார்.
1968 ஆம் ஆண்டு 42 ஏழை விவசாயிகள் கொல்லப்பட்ட கீழவெண்மணிப் படு கொலையின் பின்னணி பற்றி எழுதப் பட்ட குருதிப்புனல் என்ற அவரது படைப்பானது 1977 ஆம் ஆண்டில் அவருக்கு சாகித்திய அகாடமி விருதினைப் பெற்று தந்தது.
பாரதிய பாஷா பரிஷத் விருது மற்றும் சரஸ்வதி சம்மான் உள்ளிட்ட பல மதிப்பு மிக்க விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
சாகித்திய மற்றும் சங்கீத நாடக அகாடமி விருதுகளைப் பெற்ற ஒரே தமிழ் எழுத்தாளர் இவராவார்.