“இந்திரா” என்பது இந்தியா மற்றும் இரஷ்யாவிற்கு இடையேயான கூட்டுப் போர் பயிற்சியாகும்.
இதுவரை ஒற்றை ஆயுதப் படைகளுக்கான (Single Service exercise) கூட்டுப் போர் பயிற்சியாக இருநாடுகளின் ஆயுதப்படைகளுக்கிடையே கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்தியா மற்றும் இரஷ்யாவில் மாறிமாறி நடத்தப்பட்டு வந்தது.
இவ்வருடம் இருநாடுகளின் இராணுவத்தின் முப்படைகளும் (தரைப்படை, கடற்படை, விமானப்படை) பங்கேற்கும் விதத்தில் இக்கூட்டுப் போர் பயிற்சி மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதுதான் முப்படைகளும் பங்குபெறும் உலகின் முதல் சர்வதேச கூட்டுப் போர் பயிற்சியாகும்.
இரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெற உள்ள இக்கூட்டுப் போர் பயிற்சியின் முக்கிய நோக்கம்- பயங்கரவாத எதிர்ப்பு ஆகும்.
2014ஆம் ஆண்டு “Avia Indra – ஏவியா இந்திரா” எனும் விமானப் படைகளுக்கான கூட்டுப் போர் பயிற்சிகளில் இருநாட்டு விமானப்படைகளும் கலந்து கொண்டன.