இந்திய அரசியல் நிர்ணய சபையானது 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி அன்று தேவநகரி எழுத்தில் எழுதப்பட்ட இந்தி மொழியை இந்தியாவின் அலுவல் மொழியாக ஏற்றுக் கொண்டது.
1916 ஆம் ஆண்டு இதே நாள் தான், இந்தி மொழியை தேவநகரி எழுத்து வடிவங்களில் அமைப்பதற்கு முக்கியப் பங்காற்றிய பியோஹர் ராஜேந்திர சிங் அவர்களின் பிறந்த நாளாகும்.
நாட்டில் முதல் இந்தி தினமானது 1953 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதியன்று கொண்டாடப் பட்டது.