இந்து குஷ் இமயமலையில் உள்ள (HKH) பனிப்பாறைகளின் அளவானது 65 சதவீதம் என்ற அளவிற்கு வேகமாக குறைந்து வருகிறது.
இந்தப் பனிப்பாறைகளில் 2010 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் ஆண்டிற்கு 0.28 மீட்டர் நீருக்குச் சமமான (m w.e.) பனிப்பாறைகள் குறைந்துள்ளன.
இது 2000 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் ஆண்டிற்கு 0.17 (m w.e.) ஆக இருந்தது.
காரகோரம் மலைத்தொடரில் உள்ள பனிப்பாறைகளின் அளவும் குறையத் தொடங்கி உள்ளது.
2010 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இதன் பனிப்பாறைகளில் 0.09 (m w.e.) அளவில் குறைவு பதிவாகியுள்ளது.
இந்துகுஷ் இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் தோராயமாக 73,173 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரவியுள்ளன.
இப்பகுதியின் சராசரி வெப்பநிலை 1951 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் ஒரு தசாப்தத்திற்கு 0.28 ° C என்ற அளவில் அதிகரித்துள்ளது.
2100 ஆம் ஆண்டில் , இமயமலைப் பனிப்பாறைகள் 75 சதவீத பனியை இழக்கக்கூடும்.
சுமார் 3,500 கிமீ (2,175 மைல்கள்) பரப்பினைக் கொண்ட இந்துகுஷ் இமயமலையானது ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், சீனா, இந்தியா, மியான்மர், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் பரவியுள்ளது.