TNPSC Thervupettagam

இந்து பிசினஸ்லைன் இதழின் மாற்றத்தினை உருவாக்குபவர் விருதுகள்

November 9 , 2023 235 days 162 0
  • பிசினஸ்லைன் இதழின் மாற்றத்தினை உருவாக்குபவர் விருதுகள் ஆனது, தற்காலத்தில் உலகில் நேர்மறையானத் தாக்கத்தை ஏற்படுத்திய அசாதாரண சிந்தனையாளர்கள் மற்றும் சாதனையாளர்களை அங்கீகரித்துக் கௌரவமளிக்கும் வகையில் கருத்தாக்கப்பட்டது.
  • மாற்றத்தை உருவாக்குபவர் என்பவர் ஒரு மில்லியன் மனிதர்களில் ஒருவர் என்ற அரிதானவர், கனவு காண்பவர், அவர்களின் புரட்சிகரச் சிந்தனைகளால் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்த மாற்றத்தை ஏற்படுத்தியவர் ஆவர்.
  • விருது பெற்றவர்கள்
    • இந்திய ரிசர்வ் வங்கி – 2023 ஆம் ஆண்டின் மாற்றத்தினை உருவாக்குபவர்
    • அமுல் - மாற்றத்தினை உருவாக்கும் மரபார்ந்த நிறுவனம்
    • ஹெர்கே மற்றும் பெண்கள் கல்வி (கூட்டாக விருது பெற்றவர்கள்) – மாற்றத்தினை உருவாக்குபவர்: சமூக மாற்றம்.
    • ஸ்டல்லாப்ஸ் டெக்னாலஜிஸ் - மாற்றத்தினை உருவாக்குபவர்: எண்ணிம மாற்றம்
    • பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா – மாற்றத்தினை உருவாக்குபவர்: நிதியியல் மாற்றம்.
    • ஸ்ரீநிதி RS – மாற்றத்தினை உருவாக்கும் இளம் நபர்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்