TNPSC Thervupettagam

இந்தோனேசியாவின் தலைநகரம் மாற்றப்பட்டது

September 2 , 2019 1818 days 1068 0
  • இந்தோனேசியாவின் அதிபர் ஜோகோ விடோடோ, தனது நாட்டின் தேசியத் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து (ஜாவா தீவில்) கிழக்கு கலிமந்தன் மாகாணத்திற்கு (போர்னியோ தீவில்) மாற இருக்கின்றது என்று அறிவித்துள்ளார்.
  • இதற்கு மேற்கோள் காட்டப்பட்ட காரணங்கள்: 10 மில்லியன் மக்கள் தொகை, காற்று மாசுபாடு, போக்குவரத்து நெரிசல், மோசமான நகரத்  திட்டமிடல். இங்கு 40% நகரம்  கடல் மட்டத்திற்குக் கீழே உள்ளது.
  • இந்தோனேசியாவின் 17,000 தீவுகளைக் கொண்ட தீவுக் கூட்டத்தில் கலிமந்தன் மிகவும் மையத்தில் உள்ளது.
  • உலகின் மூன்றாவது பெரிய தீவு மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய தீவு போர்னியோ  ஆகும்.
  • இந்தத் தீவு மலேசியா, புருனே மற்றும் இந்தோனேசியா ஆகிய மூன்று நாடுகளுக்கிடையே அரசியல் ரீதியாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
  • கலிமந்தன் போர்னியோ தீவின் இந்தோனேசியப் பகுதியில் உள்ளது. இது அத்தீவின் பரப்பளவில் 73% கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்