ஜகார்த்தா நகரமானது நெரிசல் மிக்கதாகவும், மாசுபாடு நிறைந்ததாகவும், அவ்வப் போது நிலநடுக்கத்தினால் பாதிக்கப்படுகின்றதாகவும் மற்றும் விரைவாக ஜாவா கடலில் மூழ்கும் அபாயம் கொண்டதாகவும் உள்ளது.
இது உலகிலேயே மிகவும் விரைவாகக் கடலில் மூழ்கி வரும் நகரம் என்று குறிப்பிடப் படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, 2050 ஆம் ஆண்டில் இந்த நகரின் மூன்றில் ஒரு பகுதி நீரில் மூழ்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், தற்போது அந்நாட்டு அரசாங்கமானது, இந்தோனேசியாவின் தலைநகரைப் போர்னியோ தீவுக்கு மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்தோனேசியாவின் சுதந்திரத் தினத்துடன் ஒன்றும் வகையில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதியன்று இந்த நகரம் தலைநகரமாகச் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.