இந்தோனேசியாவுடனான 75 ஆண்டுகால அரசுமுறை உறவு
May 6 , 2024
205 days
214
- இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான அரசுமுறை உறவுகள் 1950 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
- இந்தோனேசிய அதிபரின் வருகை மற்றும் 1951 ஆம் ஆண்டில் நட்பு ஒப்பந்த கையெழுத்தின் மூலம் இது தொடங்கப்பட்டது.
- அணிசேரா இயக்கத்தின் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வான 1955 ஆம் ஆண்டு பாண்டுங் மாநாட்டில் இரு நாடுகளும் முக்கியப் பங்கேற்பாளர்களாக இருந்தன.
- அவை 2005 ஆம் ஆண்டில் ஒரு உத்திசார் கூட்டாண்மையை நிறுவி, பின்னர் அதனை ஒரு விரிவான உத்திசார் கூட்டாண்மையாக மேம்படுத்தின.
- இந்தியாவின் கிழக்கத்திய நாடுகளுக்கு உகந்த கொள்கை வகுப்பு (ஆக்ட் ஈஸ்ட்) கொள்கையில் இந்தோனேஷியா முக்கியப் பங்குதாரராக உள்ளது.
Post Views:
214