ரக்கைன் மாநிலத்தில் சகஜ நிலையை மீண்டும் கொண்டு வரவும், வளர்ச்சி மேம்பாடுகளை உண்டாக்கவும் இந்தியா மற்றும் மியான்மர் ஆகிய இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டுள்ளது.
ரக்கைன் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்காகவும், அப்பகுதி மக்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காகவும் ஓர் ஒத்துழைப்பு கூட்டுறவு பங்காளருடன் இரு நாட்டு அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தை மியான்மர் மேற்கொள்வது இதுவே முதன் முறையாகும்.
பிற நாட்டில் அகதிகளாகி தாய் நாடான மியான்மர் திரும்பும் ரோகிங்கியா மக்களின் உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட நிலையில் (Prefabricated) இருக்கும் வீடுகளை அமைத்தல் உட்பட பல திட்டங்களை இந்திய அரசானது இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் மேற்கொள்ள உள்ளது.