TNPSC Thervupettagam

இந்தோ-மியான்மர் எல்லையில் தடுப்பு வேலி

February 12 , 2024 158 days 236 0
  • இந்தியா மியான்மர் நாடுகளுக்கு இடையேயான 1,643 கி.மீ. நீள எல்லை முழுவதும் வேலி அமைத்து அதனருகில் ஒரு ரோந்துப் பாதையை அமைக்க உள்ளது.
  • மொத்த எல்லை நீளத்தில், மணிப்பூரின் மோரே என்னுமிடத்தில் 10 கி.மீ. நீள பகுதியில் ஏற்கனவே வேலி அமைக்கப்பட்டுள்ளது.
  • மேலும், கலப்பு முறைக் கண்காணிப்பு அமைப்பு மூலம் வேலி அமைக்கும் இரண்டு சோதனை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
  • அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் 1 கி.மீ. நீளத்திற்கு வேலி அமைக்கப்படும்.
  • மேலும், மணிப்பூரில் தோராயமாக 20 கி.மீ தூரத்திற்கு வேலி அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.
  • இந்தியா மற்றும் மியான்மர் ஆகியவை வேலி இல்லாத எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.
  • இருபுறமும் உள்ள மக்கள் குடும்ப மற்றும் இனம் சார்ந்த உறவுகளைக் கொண்டு ள்ள நிலையில், இது 1970 ஆம் ஆண்டுகளில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தூண்டியது.
  • தடையற்ற நடமாட்ட (இடம் பெயர்வு) பகுதி (FMR) வசதி இந்தியாவால் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்