TNPSC Thervupettagam

இந்தோ – மியான்மர் கார்பட்

May 25 , 2019 1917 days 647 0
  • இந்தியா – மியான்மர் நாடுகளின் ஒருங்கிணைந்த கடல் ரோந்துப் பயிற்சியின் (CORPAT) 80-வது பதிப்பானது மே 20 அன்று அந்தமான் நிக்கோபர் தீவுகளில் துவங்கியது.
  • மியான்மர் கடற்படைக் கப்பல்களான UMS கிங் தபின்ஷீவ்ஹிட்டி (773) மற்றும் UMS இன்லே ஆகியவை INS சாராயு என்ற இந்திய கப்பற்படையின் கப்பலுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்ளவுள்ளன.
  • இந்தக் கப்பல்கள் இரு நாடுகளுக்கிடையேயான சர்வதேச கடல்சார் எல்லைப் பகுதியில் ரோந்துப் பயிற்சியில் ஈடுபடவிருக்கின்றன.
  • இவை 4 நாட்களுக்கு ஏறத்தாழ 725 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரோந்துப் பயிற்சியில் ஈடுபடவிருக்கின்றன.
  • கார்பெட்டின் (CORPAT) நோக்கங்கள் இரு நாடுகளையும் பாதிக்கும் தீவிரவாதப் பிரச்சனைகளை எதிர்கொள்வது, சட்டவிரோதமாக மீன் பிடித்தல், போதைப் பொருள் கடத்தல், ஆள் கடத்தல், வேட்டையாடுதல் மற்றும் இதர சட்ட விரோத நடவடிக்கைகள் ஆகியவற்றைத் தடுப்பது குறித்துப் பயிற்சி மேற்கொள்வதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்